சிறப்பு செய்திகள்

சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம், எத்தனை இடர்வரினும் மீண்டு எழும் – துணை முதலமைச்சர் டுவிட்டரில் பதிவு

சென்னை

சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு எத்தனை இடர்வரினும் சென்னை மீண்டு எழும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆசியாவின் டெட்ராய்ட், மருத்துவ தலைநகர், தொன்மையான மாநகராட்சி என பற்பல பாரம்பரிய பெருமைகள் கொண்ட சென்னையின் 381வது பிறந்த தினம் இன்று.

வந்தாரை வாழவைக்கும் நகரமும் பலதரப்பட்ட மக்களின் மானுட சமுத்திரமுமான சென்னை எத்தனை எத்தனை இடர்வரினும் மீண்டு எழும்! மறுமலர்ச்சி பெறும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.