திருவண்ணாமலை

திமுக, அமமுகவிலிருந்து 300பேர் விலகி அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

திருவண்ணாமலை

திமுக, அமமுக கட்சிகளிலிருந்து 300 பேர் விலகி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டமடுவு, மேல் ராவந்தவாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கழக கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து கட்டமடுவு, மேல் ராவந்த வாடி பகுதியை சார்ந்த தி.மு.க., அ.ம.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகியும் மற்றும் புதிதாக இளைஞர்கள் இளம்பெண்கள் 300பேர் முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

மாற்றுக் கட்சியில் இருந்து வந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.