திருவள்ளூர்

வீராணத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் – பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

திருவள்ளூர்

திருத்தணி தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அடங்கிய வீராணத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதியதாக கட்டி முடிக்கப்பட்டது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் (2018-2019) ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து வீரக்கோயில் மோட்டூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.7.40 லட்சம் செலவில் சிமென்ட் சாலை, அமைப்பதற்கும், வீரமங்கலம் காலனியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான மழைநீர் வடிகால் கால்வாய் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கும், அதே பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.7.40 லட்சம் செலவில் தார்சாலை அமைப்பதற்கும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் ஒன்றியக்குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், மாவட்ட கவுன்சிலர் ஜெ.பாண்டுரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ஸ்டாலின், ஒன்றியக் கவுன்சிலர்கள் ஏ.பி.சந்திரன், எரும்பி.குமார், ஆனந்தன், ராஜாநகரம் மோட்டூர் சேகர், ஒப்பந்ததாரர் பாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.