நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு உயிரூட்டிய பிரதமருக்கு கழகம் சார்பில் நன்றி- எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை

சென்னை
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பிரதமருக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்மாவின் அரசில், பாரதப்பிரதமரை நான் நேரில் சந்திக்கும் போதும், கடிதங்களின் வாயிலாகவும் அம்மா அரசின் கனவு திட்டமான கோதாவரி–-காவேரி இணைப்பினை நிறைவேற்றிட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தேன்.
அதனைத்தொடர்ந்து தற்போது இந்த நிதிநிலை அறிக்கையில் நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பாரதப் பிரதமருக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், கங்கை-கோதாவரி-கிருஷ்ணா-காவேரி-–பெண்ணையாறு நதிகள் இணைப்புத்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தொற்றுமை கிடைத்தவுடன் இத்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சுமார் 44,000 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும், எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.