சிறப்பு செய்திகள்

தமிழ் இனத்திற்காக சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

சென்னை,

தமிழினத்திற்காக சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா என்று கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அன்னை மொழி காக்க அயராது உழைத்தவரும், தமிழ் சமுதாயத்தை ஒன்றுகூட்டி ஒற்றுமை கண்டவரும், தமிழின் உயர்வை தன் நாவன்மையால், தமிழ் வளர்ச்சிக்கு தன்னலம் பாராது உழைத்தவரும், தமிழை இமைபோல் காத்தவரும், தமிழின் ஏற்றம்

கண்டு மகிழ்ந்தவரும், தமிழினத்திற்காக சோர்வின்றி உழைத்தவருமான தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் அவருக்கு என் மரியாதையையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.