திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முதல் தளத்தில் நேற்று கொரோனா ஊரடங்கினை முன்னிட்டு தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் மந்தாகிணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு.சரவணன் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டமானது கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவசர கோரிக்கைகள் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் இன்று தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இதன்படி நேற்று காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை தொலைபேசி வழியாக பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களது அவசர கோரிக்கைகளை நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் தொலைபேசி மூலமாக தெரிவித்த கோரிக்கைகள் மீது தொடர்புடைய துறை அலுவலர்களிடம் உடனடியாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். மேலும், பொது மக்கள் whatsApp மூலமாகவும் தங்களது கோரிக்கைகளை மனுவாக அனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற தொலைபேசி வழியான மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வருவாய்த் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், மகளிர் திட்டம், உட்பட பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் தொலைபேசி வழியாக 113 அழைப்புகளும், வாட்ஸ்ஆப் வழியாக 29 கோரிக்கைகளும், மற்றும் பொது மக்களிடமிருந்து நேரிடையாக பெறப்பட்ட மனுக்கள் 129 என மொத்தம் 284 கோரிக்கைகள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.