தமிழகம்

ரஷ்யா, மாஸ்கோ இந்திய தூதரகப் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு துணை முதல்வர் வாழ்த்து

சென்னை

ரஷ்யா,மாஸ்கோ இந்திய தூதரகப் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது.

ரஷ்யா-மாஸ்கோ நகரின் இந்திய தூதரகப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற தமிழகத்திலிருந்து இரு ஆசிரியர்கள் தேர்வாகியிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

சாதனை படைத்துள்ள ஆசிரியர்கள் கோவை கீதா சீனிவாசன், சென்னை தந்தரா ரெட்டி ஆகியோரின் கல்விப்பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.