தற்போதைய செய்திகள்

ஊழலுக்காக ‘பொங்கல் பரிசு’ கொடுத்த ஒரே கட்சி தி.மு.க -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

ஊழலுக்கு பொங்கல் பரிசு கொடுத்த ஒரே கட்சி தி.மு.க. தான் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருநெல்வேலியில் கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் ேபசியதாவது:-

பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் இருக்கும் என்று சொன்னார்கள். இதனை முழுமையாக தரவில்லை. கொடுக்கப்பட்ட பொருட்களும் தரமாக இல்லை. எடையும் சரியில்லை. தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்பில் மட்டும் ரூ.500 கோடி அளவுக்கு ஊழல்

செய்துள்ளது. மக்கள் வயிற்றில் அடித்துள்ளார்கள். மிளகாய் பையில் வெறும் காற்றை அடைத்து கொடுத்துள்ளார்கள். விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்கிறார்கள். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க.. பொங்கல் தொகுப்பில் கூடவா இப்படி செய்வார்கள்.

மஞ்சள் தூளில் கோலமாவு போட்டுள்ளார்கள். கோதுமையில் வண்டு உள்ளது. புளியில் பல்லி உள்ளது. பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் மக்களுக்கு அளிக்கும் உணவு தொகுப்பில் கூட கொள்ளை அடித்த ஒரே கட்சி தி.மு.க..

கரும்புக்கு ரூ.33 ரூபாய் என்று நிர்ணயம் செய்தார்கள். ஆனால் விவசாயிகளுக்கு 16 ரூபாய் தான் வழங்கினார்கள். கரும்புக்கு 17 ரூபாயை ஏமாற்றியுள்ளார்கள். கரும்பில் மட்டும் ரூ.34 லட்சம் ஏமாற்றியுள்ளார்கள். பை தருவோம் என்றார்கள். பலபேருக்கு பை

தரவில்லை. இப்படி ஒவ்வொரு பொருளில் ஊழல் செய்து அந்த ஊழலுக்காக பொங்கல் தொகுப்பு அளித்துள்ளார்கள். அதுபோல நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சி. அப்போது கூட்டணியில் இருந்தது தி.மு.க.. நாமக்கல் எம்.பி. காந்திராஜன்
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த போதுதான் இதனை கொண்டு வந்தார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் தான். இதனை தடுப்பதற்கு குரல் கொடுத்தது கழகம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் பேசினார். ஏன் ரத்து செய்யவில்லை.

நீட் தேர்வை ரத்து செய்யும் எங்களிடம் ரகசியம் எங்கள் அப்பாவுக்கு தெரியும் என்று உதயநிதி பேசினார். அந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா, இல்லையா? இப்போது ரத்து செய்ய வேண்டியது தானே? நாங்களா வேண்டாம் என்று சொல்கிறோம். எங்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்.

கழகத்தை பொறுத்தவரையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் நிலைபாடு. இதில் எந்த மாற்றமும் கிடையாது. அதே வேளையில் சட்ட ரீதியாக சந்தித்ததால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். ஏன் என்றால் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை எல்லாம் ஆராய்ந்து செயல்பட வேண்டுமே ஒழிய எங்கள் வீண் மீது பழி சுமர்த்தி நீங்கள் தப்பிக்க பார்க்ககூடாது.

நீட்டை கொண்டு வந்தது தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் தான். இதனை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் கழகமும், கழக அரசும் இதனை தடுக்க எல்லா வகையிலும் முயற்சி செய்தோம். நீதிமன்ற உத்தரவு இருந்த காரணத்தினால் இதனை நடைமுறைப்படுத்த வேண்டி கட்டாயத்தில் இருந்தோமே ஒழிய நீட் தேர்வை கொண்டு வரவில்லை.

நீட் தேர்வு வருவதற்கு முழுக்க முழுக்க காரணம் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான். இதற்கு ஆதாரம் உள்ளது. மறைக்கவே முடியாது. ஆனால் பேச்சு திறமையால் மக்களிடத்தில் தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

நகர்ப்புற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். நாம் பெறுகின்ற வெற்றி தி.மு.க.வுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். கழகம் வெற்றி பெற்றால் தமிழக மக்களின் கனவு நனவாகும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி ேக.பழனிசாமி பேசினார்.