சிறப்பு செய்திகள்

யு.என்.ஐ. டி.குமார் மறைவுக்கு ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

சென்னை

யு.என்.ஐ. செய்தி நிறுவன சென்னை தலைமை நிர்வாகி டி.குமார் மறைவுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிரபல செய்தி நிறுவனமான யு.என்.ஐ. நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக புகைப்பட கலைஞராக பணியாற்றி தலைமை பொறுப்பிற்கு உயர்ந்த டி.குமார் மன உளைச்சல் காரணமாக தன்னுயிரை மாய்த்து கொண்டார் என்ற செய்தியறிந்து ஆற்றொணா துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அன்னாரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவதோடு, இதுபோன்ற உயிரை மாய்த்துக் கொள்ளும் செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ..பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.