திருவண்ணாமலை

படவேட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி நிவாரணம் திட்டம் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணத்தொகைகளை வீடு தேடி வழங்கும் திட்டத்தை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் ஊராட்சியை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு வீடுதேடி கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

பின்னர் வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக முதல்வர் ஊரடங்கை அமல் செய்தார். இதனால் மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள 13.5 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணத்தொகையாக வழங்க உத்தரவிட்டார்.

மேலும் நிவாரணத் தொகைகளை வீடுதேடி வழங்கவும் ஆணையிட்டதின் பேரில் போளூர் ஊராட்சியில் உள்ள கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 7 ஊராட்சிகளில் 753 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு வீடு தேடி நிவாரணத்தொகை ரூ. 1000 வழங்கும் திட்டம் படவேடு கிராமத்தில் துவக்கி வைக்கப்பட்டது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் போளூர் வட்டாட்சியர் ஜெயவேல், இடர்பாடு நிவாரண வட்டாட்சியர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.