தற்போதைய செய்திகள்

அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் 1000 உறுப்பினர்கள் சேர்ப்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் 5 கிராமங்களில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் 1000 பேர் உறுப்பினர்களாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்ர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் சேர்ந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் உள்ள விளை, சித்தேரி, நெசல். கொளத்தூர், அழகுசேனை உள்ளிட்ட 5 கிராமங்களில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் 5 கிராமங்களிலிருந்தும் 1000 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

இவ்விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:- 

அம்மா அவர்களால் 2008-ம் ஆண்டு துவக்கப்பட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை அமைப்பில் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பில் மேலும் இளைஞர்களையும் இளம்பெண்களையும் அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்ற தமிழகமுதல்வரும், துணைமுதல்வரும் ஆணையிட்டதின் பேரில் ஆரணி தொகுதி முழுவதும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை அமைப்பில் உறுப்பினர்களை சேர்த்து பூத் கமிட்டி அமைத்து வருகிறோம்.

இப்பணி மேற்கு ஆரணி ஒன்றியம் காட்டுகா நல்லூரில் துவக்கப்பட்டு தொடர்ந்து மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றியம், ஆரணி வடக்கு ஒன்றியம், ஆரணி தெற்கு ஒன்றியம், ஆரணி டவுன், செய்யாறு ஒன்றியத்தில் உள்ள12ஊராட்சிகள், கண்ணமங்களம் பேரூராட்சி பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று ஆரணி தெற்கு ஒன்றியத்திலுள்ள விளை, சித்தேரி, நெசல். மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த கொளத்தூர், அழகுசேனை உள்ளிட்ட 5 கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது என் முன்னிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மேலும் ஆரணி தொகுதி முழுவதும் சுமார் 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு ஆரணி தொகுதி கழகத்தின் கோட்டை என நிரூபிக்கப்படும்.

அம்மாவின் தலைமையில் தொடர்ந்து கழகம் இரண்டு முறை ஆட்சியை பிடித்தது. கழக ஆட்சி தொடர நாம் ஒன்றிணைந்து கழக வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம். கழகம் வெற்றிபெற இளைஞர் இளம்பெண்கள் கழக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். வரும் 6 மாதம் உங்கள் உழைப்பை கழகத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும்.

நமத ஆட்சி தொடர திண்ணை பிரச்சாரம் செய்யுங்கள். ஆரணி மக்களின் பிரச்சனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் என்னற்ற ஆலயங்கள் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. பல ஊர்களில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆரணி தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் கழக அரசுக்கு என்றும் நாம் விசுவாசமாக இருக்க வேண்டும்.

நான் ஆரணி சட்டமன்ற தொகுதியில் வாரத்திற்கு 5 நாட்கள் இருக்கிறேன். தங்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் தெரிவிக்கவும், உடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் தலைமை அறிவிக்கும் கழக வேட்பாளரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களில் கழக கொடியினை அமைச்சர் ஏற்றி அணைவருக்கும் இணிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளார் ஜி.வி.கஜேந்திரன் தலைமை தாங்கினார்.