தற்போதைய செய்திகள்

நீட்தேர்வில் வெற்றிபெற்ற 11 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.50,000 ஊக்கத்தொகை – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

கள்ளக்குறிச்சி

நீட்தேர்வில் வெற்றிபெற்ற 11 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகையை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 11 மாணவ – மாணவிகள் அரசு அறிவித்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் பேரில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ். படிப்பு படிக்க சேர்க்கை பெற்றுள்ளனர். ஏழை, எளிய மாணவர்களான இவர்களுக்கு கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு 11 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மோகன், பிரபு எம்.எல்.ஏ., மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ அழகுவேல்பாபு, நகர செயலாளர் பாபு, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன், கூட்டுறவு கைத்தறி இணைய தலைவர் பரமசிவம், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொருளாளர் வெற்றிவேல் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.