தற்போதைய செய்திகள்

விராலிமலை கல்குடி ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

சென்னை

விராலிமலை கல்குடி ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்தப்படுமா என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

விராலிமலை தொகுதி கல்குடி ஊராட்சி என்பது பெரிய ஊராட்சி, சிறந்த ஊராட்சி. வரும் காலத்தில் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடடிவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக இந்த 30 படுக்கைகள் கொண்ட, 24 மணி நேரம் சேவையை உறுதிபடுத்தக்கூடிய என்பது சிறந்த திட்டம்.

இதனை 385 ஒன்றியங்களுக்கும் விரிவுப்படுத்தியாகி விட்டது. வரும் காலத்தில் ஒரு ஒன்றியத்திற்கு ஒன்று என்ற இலக்கை எய்துவிட்டதால் இரண்டாவதாக ஒரு ஒன்றியத்திற்கு இரண்டாவது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக உயர்த்தும் திட்டத்தை அரசு கருத்தில் கொள்ளுமா

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.