வணிகர்கள் உரிமைகளை பெற கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

சென்னை
வணிகர்கள் தங்கள் உரிமைகளை கழக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
வணிகர் தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
“பிறர் பொருளையும் தமது பொருள் போலக்கருதி நடுநிலையுடன் செயல்படுவதே வணிகர்களுக்கு அழகு” என்ற வள்ளுவ வாக்கிற்கிணங்க வணிகம் செய்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திட உறுதுணையாக இருக்கும் வணிகர்கள் அனைவருக்கும் எனது “வணிகர் தின” நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வணிகர்கள் தங்கள் உரிமைகளை பெறுவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.