தற்போதைய செய்திகள் வேலூர்

ஓட்டை சைக்கிளில் சென்ற ஆ.ராசாவுக்கு பலகோடி ரூபாய் சொத்து வந்தது எப்படி? மண்டல தேர்தல் பொறுப்பாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கேள்வி

வேலூர்

தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு பல கோடி சொத்து வந்தது எப்படி என்று மண்டல தேர்தல் பொறுப்பாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் புறநகர் மாவட்டம், அணைக்கட்டு மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் தாங்கல், திப்ப சமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் தேர்தல் பணி குறித்தும், மகளிர் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், ஒன்றிய கழக செயலாளர் கே.ஆனந்தன் தலைமையில்
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூர் மண்டல தேர்தல் பணி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியன், வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆவின் தலைவருமான த.வேலழகன் ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.

இக்கூட்டத்தில் வேலூர் மண்டல தேர்தல் பொறுப்பாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மகளிர் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மகத்தான திட்டங்களை கொண்டு வந்தார்.
அம்மா கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் நிறைவேற்றி கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திட்டங்களை கழக நிர்வாகிகள் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தாலே போதும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறுவது உறுதி.

ஸ்டாலின் வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டே வெற்று அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு வெளியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் செயல்பாடுகள் பற்றி எதுவும் தெரியாது.அவருடைய பொய்யான குற்றச்சாட்டுகள் தமிழக மக்களிடையே எடுபடாது. ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்கிற தகுதி தவிர வேறு எதுவும் கிடையாது.

பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் மக்களிடம் தெரிவித்து,மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார். பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் தொடர்ந்து கழகம் மகத்தான வெற்றி பெற்றது. திமுகவினரின் பொய் பித்தலாட்டங்களை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர்.ஓட்டை சைக்கிளில் சென்று கொண்டிருந்த முன்னாள் திமுக மத்திய அமைச்சர் அ. ராசாவுக்கு பல கோடி ரூபாய் சொத்துக்கள் எப்படி வந்தது?.

2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். உலக ஊழல்வாதிகள் பட்டியலில் ஆ.ராசா இரண்டாவது இடத்தில் உள்ளார். என டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோருக்கு அம்மாவைப் பற்றியும்,
முதல்வர் பற்றியும் பேச எந்த அருகதையும் கிடையாது. அம்மாவின் ஆட்சியில் தமிழக மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தான் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகின்றனர்.ஆகவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை முதலமைச்சராக அரியணையில் அமர்த்த கழக நிர்வாகிகள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு வேலூர் மண்டல தேர்தல் பொறுப்பாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசினார்.

தொடர்ந்து வேலூர் மண்டல தேர்தல் பொறுப்பாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன், வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்
த.வேலழகன் ஆகியோர் மகளிர் பூத் கமிட்டி விபர கையேடுகளை நிர்வாகிகளிடம் வழங்கினர்.