மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடிவடையும்? பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

சென்னை
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடிவடையும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ பேசியதாவது:-
மதுரையில் நடைபெறுகின்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி நடைபெற்ற பணிகளில் பல பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல மாநகராட்சி சார்பாக வைகை ஆற்றின் இருகரைகளிலும் 11 கிலோ மீட்டர் நீளத்திற்கு விரைவு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை மூலமாக 8.8 கிலோ மீட்டரும், 3.3 கிலோ மீட்டர் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியால் எடுக்கப்பட்ட பணிகள் எப்போது முடியும். மேலும் அந்த பகுதியில் அமைய இருக்கின்ற பூங்காக்கள், நடைபாதைகள், பார்க் வசதிகள் போன்ற பணிகள் எப்போது முடிக்கப்படும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ பேசினார்.