தற்போதைய செய்திகள்

அம்மா அரசுக்கு ஆதரவளிக்க மக்கள் தயாராகி விட்டனர் –

ஈரோடு

இந்தியாவே வியக்கும் வகையில் சிறப்பாக செயல்படும் அம்மாவின் அரசுக்கு ஆதரவளிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

ஈரோடு புறநகர் மாவட்டம் பவானி வடக்குஒன்றியம் ஆப்பக் கூடல், ஜம்பைை பேருராட்சிகள், பருவாச்சி, குருப்ப நாய்க்கன்பாளையம், தொட்டிபாளையம், சன்னியாசிப் பட்டி ஊராட்சி, வரத நல்லூர் ஊராட்சி , மைலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட கழகம், ,இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் குறித்தும் ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் ஆலோசனைை வழங்கி பேசியதாவது:-

இந்தியாவே வியக்கும் வண்ணம் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக பிரதமர் மோடி அவர்களே பாராட்டி உள்ளார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் உரையாற்றும் போது எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்றார். அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்கினார். மகளிர் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். பவானி தொகுதியில் தார்சாலை பணிகள், குடிநீர் திட்டங்கள் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொரோனா காலத்திலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

செம்பரம்பாக்கம் ஏரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். முதலமைச்சரை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. சமூக வலைத்தளங்களில் திமுகவினரின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அம்மா அரசின் நலத்திட்டங்கள் பொது மக்களிடம் சென்றடைய பாடுபட வேண்டும். மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.
பொதுமக்கள் அம்மா அரசிற்கு நல்லாதரவு அளிக்க தயாராகி விட்டார்கள். அம்மாவின் அரசு 2021 ம் ஆண்டிலும் அமையபாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.