குற்றச்செயலுக்கு முயன்றவரை பாதுகாப்பது எந்த விதத்தில் நியாயம்

பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி
சென்னை,
குற்றவாளியை பிடித்து கொடுத்தவர் சிறைக்கு செல்கிறார். குற்றச்செயலுக்கு முயன்றவர் மருத்துவமனையில் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறார். இது எந்த விதத்தில் நியாயம் என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி
கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், ராயபுரம் வாக்குச்சாவடி வன்முறை விவகாரம் தொடர்பாக பேசினார்.
அப்போது கடந்த 2019-ம் ஆண்டு நாங்கள் ஆட்சியில் இருந்தபோது உள்ளாட்சி தேர்தல்கள் எந்த வித அதிகார துஷ்பிரயோகம் இல்லாமல் நேர்மையாக நடைபெற்றன. கடந்த 19.2.2022 அன்று சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்து.
அப்போது ஆளுங்கட்சியை சேர்ந்த நரேஷ்குமார் என்பவர் ராயபுரம் தொகுதியில், வார்டு எண் 49ல் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றுள்ளார்.
அவரை வாக்குச்சாவடி பெண் அதிகாரி சந்தேகத்தின் பேரில் விசாரிக்கிறார். அப்போது தப்பியோடியை அவரை அங்கு நின்றவர்கள் பிடிக்க முயன்ற போது எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்தார் என்றார் அப்போது பேரவை தலைவர் மற்றும் அவை முன்னவர் சில கருத்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, நரேஷ்குமார் என்பவர் ஓட முயன்றபோது அவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அதன்பிறகு நரேஷ் என்பவர் கல்
எடுத்து எறிகிறார்.
யார் குற்றவாளியை பிடித்து கொடுத்தார்களோ அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார்கள். யார் குற்றச்செயலுக்கு முயன்றாரோ அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்படுகிறார். இது எந்த விதத்தில் நியாயம். என்றார்.
இதற்கு முதல்வர் சில விளக்கத்தை அளித்தார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, கள்ள ஓட்டுபோட முயன்றவர் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 4 வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.
ஒரு வழக்கில் பிடிவாரண்ட் இருக்கிறது என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு சில கருத்துக்களை தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி
ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு சிசி 0003672/2017.15 வது மெட்ரோ கோர்டு சென்னை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன என்ன வழக்கு என்று நான் செல்கிறேன். நீங்கள் விசாரணை செய்யுங்கள்.அமைச்சர் என் மீது குற்றம் சொல்லும் போது நான் என் கருத்தை தெரிவிக்க வேண்டுமல்லவா.
அவர் மீதான வழக்கு எண் சிசிசி/00064/2018 என்று பேசியபோது குறுக்கிட்டு பேரவை தலைவர் பேசினார்.இதற்கு எதிர்க்கட்சி தலைவர் நான் பதில் சொல்லவேண்டுமல்லவா.ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா. 4 மாதம் தண்டனை பெற்றுள்ளார். ஆதாரம் இல்லாமல் நான் பேசவில்லை.
நான் மேலேட்டமாக தான் பேசினேன். ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டார்.இது காவல்துறை மானியம்.எதுவுமே செல்ல வேண்டாம் என்றால் நாங்கள் ஏன் இங்கு வரவேண்டும். இது முக்கியமான பிரச்சனை.
இந்த சட்டப்பேரவையில் தலைவராக இருந்தவர் என்று பேசிய போது முதல்வர் குறுக்கிட்டு சில விளக்கத்தை அளித்தார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகி. பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தவர்.
பேரவை தலைவராக இருந்தவர்.அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எங்கள் கட்சியின் மூத்த தலைவர். அவர் பாதிக்கப்படும் போது பேரவையில் எடுத்து வைப்பது எங்களுடைய கடமை.
அது மட்டுல்ல வேண்டுமென்றே கழக தொண்டர்கள் மீது உண்மைக்கு மாறான வழக்குகள் பதிவு செய்து, கழக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். இதனை தொடர வேண்டாம் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.