தற்போதைய செய்திகள்

கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதிகள் – பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தல்

சென்னை

மதுரை மேற்கத் தொகுதியில் உள்ள கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதி செய்து தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று மதுரை மேற்கு தொகுதியில் கீழமாத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. இங்கு படுக்கைகள் மட்டுமே இருக்கிறது. கட்டிட வசதி எல்லாம் இருக்கின்றது. பகல் நேரத்தில் மட்டும் மருத்துவர்கள்
இருக்கிறார்கள். இரண்டு செவிலியர்கள் இருக்கிறார்கள்.

இரவு நேரத்தில் ஒரே ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் இருக்கிறார். அந்த பகுதியில் ஏறத்தாழ 7 ஊராட்சிகள் இருக்கின்றது. அனைத்தும் கிராமப்புற பகுதிகள். எனவே இரவிலும் டாக்டரை பணி நியமனம் செய்ய வேண்டும். கூடுதல் படுக்கை வசதிகளை செய்து தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துணை கேள்வி எழுப்பி பேசினார்.