தற்போதைய செய்திகள்

மதுரையில் கிரானைட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

சென்னை

மதுரையில் கிரானைட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், மதுரை மாவட்டத்தின் தொழில்வளர்ச்சிக்காக டிவிஎஸ் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலை நிறுவனங்கள் உருவாகி இருந்தாலும் கூட,

இயற்கையாக அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும், அரசின் வருவாய்க்காகவும் இருப்பது கிரானைட் தொழிற்சாலைகள். இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.

உச்சநீதிமன்றத்திலே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்த பிறகும், அதேபோல மத்திய அரசின் நிறுவனங்களும் அளித்திருக்கிறார்கள். உலக பிரசித்தி பெற்ற இத்தாலியன் கிரானைட் என்று சொல்லக்கூடிய வெள்ளை கிரானைட் மதுரையின் சிறப்பு. எனவே அதனை தொடங்குதற்கு அரசு முன்வருமா என்ற அரசின் கவனத்தை ஈர்த்தார்.