திருவள்ளூர்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் – திருவள்ளூர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆர்.டி.இ.சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கர், மாவட்ட இணை செயலாளர் விஜயலட்சுமி ராமமூர்த்தி மாவட்ட அவைத்தலைவர் இன்பநாதன், ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் கே.சுதாகர், சக்திவேல், பூண்டி மாதவன், நகர செயலாளர் கந்தசாமி, ஒன்றிய தலைவர் சிற்றம் ஜெ.சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இணை செயலாளர் பூங்காவனம் மணி ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி ரமேஷ், ஒன்றிய பொருளாளர் பூபாலன்,

மாவட்ட பிரதிநிதி பாஸ் தான், கண்ணூர் சீனிவாசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கௌரி பாண்டுரங்கன், முன்னாள் எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் தாமோதரன், ஒன்றிய கவுன்சிலர் பிரசாத், கிளைச் செயலாளர்கள் பாபு, புருஷோத்தமன், காமேஷ், லோகையா, தங்கமணி, மோகன், தாஸ்நடராஜன், வினோத்குமார், ஆவின் இயக்குனர் கோமதி நடராஜன், கிளை அவைத் தலைவர் சண்முக செட்டியார் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, கழக மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால், தலைமை கழக பேச்சாளர் நடிகர் அருள்மணி, தலைமை கழக பேச்சாளர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் நகர இளைஞரணி செயலாளர் வேல்முருகன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் நேசன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் எழிலரசன், திருவள்ளூர் நகர் அம்மா பேரவை தலைவர் ஜோதி, திரளான கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒன்றிய துணை செயலாளர் பேரம்பாக்கம் ஆர்.எஸ்.எம்.சுரேஷ் நன்றி கூறினார்