சிறப்பு செய்திகள்

மக்களுக்காக சேவை புரியும் தொண்டுள்ளம் படைத்த செவிலியர்களுக்கு நல்வாழ்த்துக்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் டுவிட்டரில் பதிவு

சென்னை,

அன்புடனும், அரவணைப்புடனும், பரிவுடனும், பாசத்துடனும் மக்களுக்காக சேவை புரியும் தொண்டுள்ளம் படைத்த செவிலியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

செவிலியர் தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

அன்புடனும், அரவணைப்புடனும், பரிவுடனும், பாசத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் சேவையாற்றும் செவிலியர்களுக்கு நன்றி நவிலும் நாளாக கொண்டாடப்படும் சர்வதேச செவிலியர்கள் தினமான இன்று அனைத்து செவிலியர்களுக்கும் #InternationalNursesDay2022 நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு”

கைம்மாறு ஏதும் எதிர்பாராமல், பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணி, எத்தகைய பேரிடர் வந்தாலும் மக்களுக்காக சேவை புரியும் தொண்டுள்ளம் படைத்த செவிலியர்கள் அனைவருக்கும் என் இனிய #செவிலியர் தினம் நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டரில் கூறி உள்ளார்.