அரியலூர்

8550 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் – அரசு கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வழங்கினார்

அரியலூர்

அரியலூர் மாவட்ட கழகம் சார்பில், திருமானூர், தா.பழூர் பகுதிகளை சேர்ந்த, 8,550 குடும்பங்களுக்கு, கொரோனா நிவாரண உதவிகளை, அரசின் தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர், தா.பழூர், ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில், அரியலூர் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொ.சந்திரசேகர் தலைமை வகித்தார். கல்லாங்குறிச்சி பாஸ்கர் வரவேற்றார். கழக ஒன்றிய செயலாளர்கள், திருமானூர் கிழக்கு வடிவழகன், திருமானூர் மேற்கு குமரவேல், திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் விஜயபார்த்திபன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமானூர் நகரம், எஸ்.ஆர்.நகர், காந்திநகர், மேல வரப்பங்குறிச்சி, நதியனூர், மேலராமநல்லூர், காமரசவல்லி, தெற்கு தேளூர், தா.பழூர் ஒன்றியத்துக்குட்பட்ட மழவராயநல்லூர், கோவில் சீமை, கடம்பூர், அறக்கட்டளை, குணமங்கலம், கீழநத்தம், ஆலவாய், மனகெதி, வடகடல், வெண்மான் கொண்டான், ஆதிச்சனூர், நாச்சியார் பேட்டை, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 8,550 குடும்பங்களுக்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட, கொரோனா நிவாரண நலத்திட்ட பொருட்களை, அரசின் தலைமை கொறடா, மாவட்ட கழக செயலாளர், தாமரை எஸ்.ராஜேந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கவுன்சிலர்கள் பாளையங்கரை ராஜேந்திரன், தனசெல்வி சக்திவேல், கழக தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சாமிநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அக்பர் ஷரிப், திருமானூர் ஒன்றியக் கவுன்சிலர் ரவி, திருமானூர் கழக நிர்வாகிகள் ஜம்பு, ரமேஷ், இளங்கோவன், கீழ காவட்டாங்குறிச்சி சேட்டு, கீழப்பழுவூர் நல்லதம்பி, குணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், தா.பழூர் சேர்மன் மகாலட்சுமி, திருமானூர் ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி, ஏலாக்குறிச்சி தமிழ்நாடு முருகானந்தம், மாரியப்பன், மேல வரப்பங்குறிச்சி ஜெய்சங்கர், அரியலூர் கழக நிர்வாகிகள் ஒ.பி.சங்கர், ஏ.பி.செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் எருத்துக்காரன்பட்டி சிவா, வக்கீல் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.