சிறப்பு செய்திகள்

கழக ஆட்சி பொற்கால ஆட்சி.திமுக ஆட்சி கற்கால ஆட்சி- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை

கழக ஆட்சி பொற்கால ஆட்சி,திமுக ஆட்சி கற்கால ஆட்சி என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையரக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாயர்களுக்கு பேட்டி அளித்தார்.

விடியாத அரசான திமுக அரசு தொடர்ந்து பொய் வழக்கில் நான் ஆஜாகி இருக்கிறேன் என்றார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும்,அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.

கேள்வி :தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விகுறியாக உள்ளதே…

பதில்: எங்கள் கழக ஆட்சியையை இன்றைக்கு உலகமே பாராட்டுகிறது. கழகத்தின் ஆட்சி பொற்கால ஆட்சியாகும். Golden Rule (கோல்டன் ரூல்) என்ற சொல்லக்கூடிய பொற்கால ஆட்சி நடந்தது. தற்போது நடப்பது கற்கால ஆட்சியாகும். தி.மு.க. பின்னோக்கி சென்றுள்ளது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் அம்மா, எடப்பாடியார் ஆட்சிக்காலத்தின்போது முதலிடத்தில் இருந்த மாநிலம் தற்போது 17வது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளது. இதற்கெல்லாம் காரணம் என்ன? பாதுகாப்பற்ற நிலைதான் நிலவுகிறது. பேருந்தில் நடத்துனருக்கே பாதுகாப்பு இல்லை. நடத்துனர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.

அதேபோல் தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டு அவரின் தலை தேடப்பட்டுவருகிறது. தி.மு.க. கட்சிக்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லை. இன்னும்கூட தலை கிடைக்கவில்லை. அதேபோல் காவல்நிலையத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைகிறார்கள். காவல்துறை பணியில் இருக்கின்ற இன்ஸ்பெக்டர் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளாகிறார்.

இப்படி எல்லாவித்திலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சீர்குலைந்துதான் இருக்கிறது. அதேபோல் வாழ்வாதற்கான சூழல், வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் இவை இரண்டும் அதிமுக ஆட்சியில் இருந்தது. இந்த இரண்டும் இல்லாத சூழல்தான் தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. அதனால் கழக ஆட்சியை அனைவரும் பாராட்டுகிறார்கள்.

கேள்வி :பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதே….

பதில்:ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். அதாவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் ஆறாக ஓடும். நீட் தேர்வு இருக்காது. மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் கொடுப்போம், மின் கட்டணம் மாதத்திற்கு ஒரு முறைதான் கணக்கு எடுப்போம், மின் கட்டணம் ஏறாது, பேருந்து கட்டணம் ஏறாது, பால் விலை ஏறாது, கல்விக் கடனை ரத்து செய்போம்,

விவசாயக் கடனை ரத்து செய்வோம், நகைக் கடனை ரத்து செய்வோம், முதியோருக்கு உதவித் தொகை ரூ.1500 ரூபாயாக உயர்த்தி தருவோம், கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவோம், பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். இவற்றில் எதையாவது ஒன்றையாவது செய்தார்களா? இதனால்தான் மக்கள் வெறுத்துப்போய்விட்டார்கள்.

இந்த ஆட்சி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். மக்களை பொறுத்தவரை விரும்பாத ஒரு ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2024 பாராளுமன்ற தேர்தல் வரும்போது இதெல்லாம் பிரதிபலிக்கும். அதிமுக ஆட்சியை தி.மு.க. ஆட்சியையும் மதிப்பிடும்போது நாங்கள் ஹீரோவாக இருந்தோம். இவர்கள் ஜீரோவாக இருக்கிறார்கள்.

அம்மா உணவகத்தை படிப்படியாக குறைத்து, கருணாநிதி பெயரில் உணவகம் கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுகிறது. அதேபோல் தாலிக்கு தங்கம், லேப் டாப், ஸ்கூட்டி போன்ற திட்டங்களை நிறுத்திவிட்டார்கள். நல்ல திட்டங்களை குளோஸ் பண்ணுவதுதான் தி.மு.க.வின் மாடல். அதாவது நல்ல திட்டங்களை குளோஸ் பண்ணிவிட்டு உருப்படாத திட்டங்களை கொண்டுவருவதுதான் திராவிட மாடல்.

சொத்து உயர்வினை கண்டித்து தமிழகம் முழுவதும் கழக ஒருங்கிணைப்பாளர்களின் ஆணைப்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேறு எந்த கட்சியும் இதனை செய்யவில்லை. மக்கள் பிரச்சினையில் எவ்வளவுதான் அடித்தாலும் தாங்குவோம் என்று விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் சிபிஐஎம் கட்சிகள்போல் வாயை மூடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் மக்கள் பிரச்சினையில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற ஒரே இயக்கம் எதுவென்றால் அது கழகம்தான். மக்கள் பிரச்சினைக்காக வீதியில் இறங்கி போராடுகின்ற இயக்கம் கழகம்தான்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.