ஆரணி அருகே இடி தாக்கி 5 பேர் காயம் – முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆறுதல்

திருவண்ணாமலை மே,17.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராந்தம் கிராமத்தில் இடி தாக்கி 5 பேர் காயம் மாடி வீடு சேதம் அடைந்தது. பசு மாடு இறந்தது.இந்த பகுதியில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராந்தம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ( நேற்று முன்தினம்) இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது பலமாக இடி விழுந்தது. இதில் விவசாயி சங்கர் என்பவரின் மாடி வீட்டின் மீது விழுந்ததில் வீட்டிலிருந்த பசுமாடு இறந்தது. வீட்டின் மேற்கூரை பல இடங்களில் இடிந்து சேதமானது.
மின்சாரத்தில் பாய்ந்ததால் வீட்டில் மின் வயர்கள் பற்றி எரிந்தது இதில் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமானது. வீட்டிலிருந்த சங்கர்(50) இவரது அம்மா முனியம்மா(70), மனைவி சூடாமணி(45), மகள் யுவராணி(22) 11 மாத குழந்தை விஷ்வேஷ்வா ஆகிய 5 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இவர்கள் ஆரணி அருசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேரில் சென்று சேதங்களை பார்வையிட்டார் பின்னர் இறந்த மாட்டினை உடனடியாக பிரேத பரிசோதனை செய்யுமாறும் அதற்கான இழப்பீடு தொகையை வழங்குமாறு கூறினார். தாசில்தார் கோவிந்தராஜன் மாட்டிற்கான இழப்பீடு தொகை ரூ 40 ஆயிரத்தை உடனடியாக வழங்க ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அனுப்ப கூறினார். மேலம் இடிதாக்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.அப்போது உடன் ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் க.சங்கர், ஜெயபிரகாசம், நகர செயலாளர் எ.அசோக்குமார், மாவட்ட ஆவின் தலைவர் பாரி பி.பாபு, குண்ணத்தூர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, விவேகானந்தன் உள்ளிட்டோர் இருந்தனர்.