தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்குகழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை
தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது.
பதினான்கு முறை வாகை சூடிய இந்தோனேஷியாவை பேட்மின்டன் விளையாட்டு போட்டியில் தோற்கடித்து தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடர எனது நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.