தற்போதைய செய்திகள்

போளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்25 லட்சம் மதிப்பில் மிதிவண்டி நிகழ்கூடம் பூமி பூஜை

கழக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போளுர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டி நிழற்கூடம் மற்றும் கழிவறை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் செல்வம், நகரச் செயலாளர் பாண்டுரங்கன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கார்த்திகேயன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தரணிதரன், நகரக் கழக பொருளாளர் சங்கர், பள்ளி நூற்றாண்டு குழு நிர்வாகிகள்,மற்றும் நகரக் கழக நிர்வாகிகள்,வட்ட கழக செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.