போளூரில் நேரடி கொள்முதல் நிலையம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ திறந்துவைத்தார்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெலாசூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பேசியதாவது.
மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, அதன் பின்னர் அம்மாவின் நல்லாசியுடனும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரால் தமிழகம் முழுவதும் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆனது விவசாயிகள் வைக்கும் கோரிக்கையை ஏற்று அந்தந்த பகுதிகளில் திறந்து வைக்கப்பட்டது.
அதேபோல் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியர் இடத்தில் அனுமதி பெற்று இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆனது. தற்போது இப்பகுதி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது இவ்வாறு அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசினார்.
உடன் மாவட்ட துணை செயலாளர் ஏ.செல்வம், சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்..ராகவன், சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் இ.ஸ்ரீதர், விற்பனை அலுவலர் இந்திராணி, ஊராட்சி மன்றத்தலைவர் ரேணு, ஒன்றிய குழு உறுப்பினர் ஏழுமலை, பேரூராட்சி செயலாளர் ஜி.பாண்டுரங்கன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.கார்த்திகேயன்,
மகளிரணி செயலாளர் பி.இந்திராபாலமுருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் இ.செந்தில், வேலூர் மண்டலம் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் எஸ்.தரணிதரன்,ஒன்றிய அவைத்தலைவர் அல்லி பாபு, உள்ளிட்ட ஒன்றியகழக, நகர கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.