ஈஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள ஈஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிட்ளிப்பட்டு கிராமத்தில் கமண்டல நாகநதி அருகில் மிகவும் பழமையான ஸ்ரீ தெய்வநாயகி சமேத ஸ்ரீ ஆபத்சகாய ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் புனரமைப்பு பணிகள் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்து வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை மூலம் 70 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 18 லட்ச ரூபாய் வந்துள்ளது. கோயில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பணிகள் நடைபெற்று வருவதை முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
அப்போது உடன் மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளார் வக்கீல் க.சங்கர், நகர செயலாளர் எ.அசோக்குமார், மாவட்ட ஆவின் தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் ப.திருமால், ஜெயபிரகாஷ், வழக்கறிஞர் வி.வெங்கடேசன், மாவட்ட ஜடிவிங் செயலாளர் சரவணன், பேரவை ஒன்றிய செயலாளர் குன்னத்தூர் செந்தில், புதுப்பேட்டை வேலன், சிவனடியார் எ.தாமோதரன் உள்ளிட்டோர் இருந்தனர்.