ரேஷன் கடைகளில் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ ஆய்வு

தென்காசி
ரேஷன் கடைகளில் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கழக அமைப்பு செயலாளரும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான பி ஹெச் பி மனோஜ் பாண்டியன், ஆலங்குளம், கீழப்பாவூர் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் சில கடைகளில் இரண்டு வகை அரிசி இருப்பதையும் மேலும் அங்கிருந்த பொதுமக்கள் பாமாயில் கிடைப்பதில்லை என்று புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு தரமான அரிசி மற்றும் பொருட்களை வழங்குமாறு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கணபதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் இராதா, பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், இளைஞர் பாசறை துணை செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சாந்தகுமாார் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.