தற்போதைய செய்திகள் மற்றவை

பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் எம்.பி நிதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை

தேனி

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் தேனி தொகுதி எம்.பி நிதியிலிருந்து உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பேரூந்து நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்திடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற எம்.பி ப.ரவீந்திரநாத் 12 மீட்டர் உயரம் கொண்ட உயர்கோபுர மின்விளக்கு அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9 லட்சம் ஒதுக்கினார்.

மேலும் சில நாட்களுக்கு முன் புதிய பேரூந்து நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நேற்று உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை நகர செயலாளர் என்.வி.ராதா தலைமையிலும் நகர துணை செயலாளர் அப்துல்சமது, நகர்மன்ற உறுப்பினர் ஓ.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி அன்பு, மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், கோவை மண்டல தகவல்தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராஜகோபால், முன்னாள் நகர பொருளாளர் பொன்.ரெங்கராஜ் மற்றும் நகர நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.