தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை

சிவகங்கை எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் குமுறல்

சிவகங்கை

தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று சிவகங்கை தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் காளையார் கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது பொதுமக்கள் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ.விடம் தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை என்று தெரிவித்தனர்.

மேலும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளோம். ஓராண்டாக எந்த ஒரு சாலை பணிகளும் நடைபெறவில்லை. அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, சுகாதாரம், குடிநீர் ஆகியவற்றை கூட தி.மு.க அரசு செய்து கொடுக்கவில்லை என்று சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதன் பின்ஙனர் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு அமைச்சர் தொகுதி தவிர பிற தொகுதிகளுக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செயல்படுத்துவதில்லை. நான் சென்ற அனைத்து கிராம பகுதியிலும் இது மாதிரியான பாதிப்புகளை கிராம மக்கள் அனுபவித்து வருகின்றனர். தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்துடன் இருக்கின்றனர்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் கூறினார்.