இனியாவது ரவுடிகள் மீது நடவடிக்கை பாயுமா?முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

சென்னை
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் கடந்த 18-ந்தேதி பட்டப்பகலில் பைனான்சியர் ஒருவர் ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இக்கொலை சம்பவத்துக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நான் சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும்போது ரவுடிகளுக்கு காவல்துறையினர் மீது பயம் என்பது போய்விட்டது என்று பேசினேன். அதை உறுதி செய்வது போல் சென்னை அமைந்தகரையில் 18.05.2022 அன்று பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் ரவுடிகளால் பைனான்சியர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர் இனியாவது ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை சட்டப்படி சுதந்திரமாக நடக்க அனுமதிப்பாரா?
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.