ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வர வேண்டும்- எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி பேட்டி

ராணிப்பேட்டை
கழக அரசு கொண்டு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட கடந்த கழக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் ரூ.2.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. கழக நிர்வாகிகளுடன்
நேரில் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காய்ச்சல்காரன் கஞ்சிக்கு அலைவது போல், கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. தி.மு.க. அரசு புதிய திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.