தமிழகம்

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து

சென்னை

உலக செஸ் வீரரை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இணையதளம் மூலம் நடைபெற்ற சதுரங்க போட்டியில் உலக சதுரங்க வாகையாளர் மாக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடி கொடுத்துள்ள இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.