தற்போதைய செய்திகள்

1347-வது ஆண்டு சதயவிழா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை

திருச்சி

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது ஆண்டு சதயவிழாவை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது ஆண்டு சதய விழாவை திருச்சி மாவட்ட கழகங்கள் சார்பில் ஒத்தக்கடையில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

அதன்படி திருச்சி மாவட்ட கழகங்கள் சார்பில் ஒத்தகடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் கழக நிர்வாகிகள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,

முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், டி.பி.பூனாட்சி, கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணை செயலாளரும்,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பி.மருதராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ரத்தினவேல், பரமேஸ்வரி முருகன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர்கள் ஜெ.சீனிவாசன், பொன்.செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் பி.ஜெகதீசன்.


இதேபோல் மதுரை மாவட்டம் ஆனையூர் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருஉருவச் சிலைக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் கழக நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன்,

கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் குலோத்துங்கன், ஆணையூர் வட்ட செயலாளர் வெள்ளி ராமு, கிழக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கார்சேரி கணேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு, கலைப்பிரிவு செயலாளர் அரசு, மாணவரணி செயலாளர் முத்துகிருஷ்ணன்,

மகளிர் அணி செயலாளர் சண்முகப்ரியா ரமேஷ் கோசிமின், மற்றும் கார்த்திகேயன் ராஜேந்திரன், சேனாதிபதி, தினேஷ்குமார், திருப்பரங்குன்றம் பகுதி துணை செயலாளர் செல்வகுமார், முத்தரையர் சங்க நிர்வாகிகள் முத்துச்சாமி, ஹரிச்சந்திரன், மகேஷ், சுரேஷ், ராமு, லாடன் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.