வேலூர் மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு
வேலூர்,
வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கலந்து கொண்டார்.
வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 1600 கூலி தூய்மை பணி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்கு ஒப்பந்ததாரர்களாக தி.மு.க.வை சேரந்த சிட்டிபாபு, மணிமாறன் ஆகியோர் உள்ளனர்.
தூய்மை பணியில் தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் தொழிலாளர்களிடம் மாதா மாதம் கூலியில் ரூ.2000 வரை குறைத்து கொடுத்து, 1600 தொழிலாளர்களின் கூலியில் மாதம் 32 லட்ச ரூபாய் வரை குறைத்து கொடுத்துள்ளனர். இதுவரை மொத்தம் 11 கோடியே 52 லட்சம் ரூபாய் வரை கூலி மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து வேலூர் மாநகராட்சியின் நிர்வாகத்தை சீர்கேட்டை கண்டித்து தூய்மை பணி தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் எஸ்.எழிலரசன் ஏற்பாட்டில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆதரவு தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் எம்.மூர்த்தி கே.ஜெயபிரகாஷ், சுகன்யாதாஸ், பகுதி கழக செயலாளர்கள் குப்புசாமி, பாண்டியன், நாகு, ஜனார்த்தனன், சுந்தரம், நாராயணன், சொக்கலிங்கம், ஜெய்சங்கர், அன்வர்பாஷா, பொதுக்குழு உறுப்பினர் குட்டி லட்சுமி சிவாஜி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் சூளைமணி, ராஜா, சூலை.ஆனந்தன், நித்யா, மாவட்ட இளைஞரணி நிர்வாகி சுரேந்தர், நீலநாராயணன், நீலமேகம், பகுதி கழக நிர்வாகிகள் பூபதி, வட்ட கழக செயலாளர்கள் விஜயகுமார், கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அமலா நிருபமா, அஸ்மிதா கோபி, அருணா விஜயகுமார் ராஜேஸ்வரி சோமு, சரவணன், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.