தற்போதைய செய்திகள்

பேரறிவாளனை வைத்து தி.மு.க. கபடநாடகம் – முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கு

நாகப்பட்டினம்,

பேரறிவாளனை வைத்து தி.மு.க. கபடநாடகம் நடத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரி திடலில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் எஸ்.ஆர்.டி.அய்யா என்கிற எஸ்.ஆர். சிவபெருமாள் தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர் தங்க. கதிரவன் வரவேற்று பேசினார்.

அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் வி.மீனாட்சிசுந்தரம், மண்டல தலைவர் எஸ்.விஜயக்குமார், மண்டல செயலாளர் என்.வெங்கடேஷன், மண்டல பொருளாளர் சி.நமச்சிவாயம், அண்ணா தொழிற்சங்க எஸ்.இ.டி.சி. பணிமனை செயலாளர் எம்.புனிதன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் கே.என்.ஆர்.சிவக்குமார், மண்டல துணைத்தலைவர் கே.வேதமூர்த்தி, எஸ்.இ.டி.சி நாகை நகர செயலாளர் வி.எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., கழக அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், கழக அமைப்பு செயலாளர்கள் எஸ்.ஆசைமணி, சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் ரா.ஜீவானந்தம், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில பொருளாளர் எம்.அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

உழைக்கும் மக்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு. இந்தியாவில் கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு வராத நேரத்தில் சம்பளம் வழங்கிய ஒரே அரசும் கழக அரசு தான்.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நளினியை மட்டும் விடுவியுங்கள், மற்றவர்களை விடாதீர்கள் என்று கூறியவர் கருணாநிதி. இப்போது என்னவென்றால் பேரறிவாளனை வைத்து கபடநாடகம் நடத்துகிறார்கள். மக்களின் உரிமையை கெடுத்தது தி.மு.க. அரசு. ஆனால் தமிழக மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்தது அம்மாவின் அரசு. தி.மு.க.

எப்படி ஆட்சிக்கு வந்தது. மக்களை ஏமாற்றி நம்ப வைத்து ஆட்சி வந்தது. ஆனால் எடப்பாடியார் அரசை இவர்களால் குறை சொல்ல முடிந்ததா? பித்தலாட்டம் செய்து ஆட்சியை பிடித்தவர்கள் தி.மு.க.வினர். அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார்கள்.

அம்மா அரசு அறிவித்த பல்வேறு நல்ல திட்டங்களை மூடு விழா செய்து விட்டனர். குறிப்பாக தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் எல்லாம் எங்கே போனது? மக்களை ஏமாற்றி மக்களுக்கு தெரியாமலே வாக்குகளை பெறுவதில் தி.மு.க.வினர் போல் வேற யாரும் இல்லை. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு என்று உயர்த்தி வேடிக்கை பார்க்கிறார்கள்.

நீட் தேர்வினால் பல கிராம மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இல்லாததையும், பொல்லாததையும் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வினருக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். அப்போதுதான் தி.மு.க.வின் ஏமாற்று வேலை வெளியில் தெரிய வரும். மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி ஏற்படும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பேசினார்.

கூட்த்தில் மாவட்ட பொருளாளர் ஆர்.சண்முகராசு, மாவட்ட இணை செயலாளர் என்.மீனா, மாவட்ட கழக துணை செயலாளர்கள் ஏ.அபுசாலிஹ், மேரி டெல்மா, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், பன்னீர், குணசேகரன், அவை ஆர்.பாலசுப்ரமணியன், சிவா, பாலை. செல்வராஜ், ஆர்.கிரிதரன். தங்க சவுரிராஜன், பக்கிரிசாமி, பொதுக்குழு உறுப்பினர் ப.சங்கர், ஒன்றிய பெருந்தலைவர் அ.கமலா அன்பழகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் டி.என். சி.எஸ்.சி. மாவட்ட பொருளாளர் ஜி.சீனிவாசன் நன்றி கூறினார்.