தற்போதைய செய்திகள்

மீண்டும் கழக ஆட்சி மலர உறுதுணையாக இருங்கள் -தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு அம்மன் கே.அர்ச்சுணன் வேண்டுகோள்

கோவை

மீண்டும் கழக ஆட்சி மலர உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மண்டலத்திற்குட்படட 17 மாவட்டங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

நமது கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சிறப்பாக செயலாற்றி வருகிறது. எந்த ஊடகமும் நமக்கு சாதகமாக இல்லாத சூழ்நிலையில் கூட தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உண்மைகளை உடனுக்குடன் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்கிறார்கள்.

தி.மு.க. சொல்லும் பொய் செய்தியை ஊடகங்கள் பெரிதாக்கு கின்றன. தி.மு.க.வுக்கு எதிரான செய்திகளை மறைக்கிறார்கள்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஆனாலும் சரி, சட்டமன்ற தேர்தல் ஆனாலும் சரி கழகத்தின் வெற்றிக்கு உங்களது பங்கு மிகப்பெரிய பங்காற்றும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு எம்.ஜி.ஆர். மன்றம் எப்படி உறுதுணையாக இருந்ததோ அதேபோல கழக ஆட்சி மலர தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஓராண்டு தி.மு.க. ஆட்சியால் மக்கள் படும் துன்பங்களை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்லுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.