அமெரிக்காவில் அம்மா உணவகம் தொடக்கம்-தமிழக வாலிபருக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து

சென்னை
அமெரிக்காவில் அம்மா உணவகம் தொடங்கிய தமிழக வாலிபருக்கு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களை போல் புரட்சித்தலைவி அம்மா, எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவர்
ஆகியோரின் புகைப்படங்களுடன் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில், மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டமான அம்மா உணவகத்தை நடத்தி, பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வரும், தமிழகத்தை சேர்ந்த இளைஞர் தினேஷக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா உணவகத்தை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசு, ஏழை மக்களின் அட்சய பாத்திரமாக விளங்கும் அம்மா உணவத்தை மீண்டும் பழையபடி தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.