தற்போதைய செய்திகள்

பத்திரிகை துறையை வளர்த்தெடுத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம்

சென்னை,

பத்திரிகை துறையை வளர்த்தெடுத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

சி.பா.ஆதித்தனாரின் 41-வது ஆண்டு நினைவு நாளையொட்டி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பத்திரிகை துறையை வளர்த்தெடுத்து, அதன் மாண்பை நிலைநாட்டி, தன்னிகரில்லா புகழை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திருமகனார் சி.பா.ஆதித்தனாரின் நினைவை போற்றுவோம்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.