இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகம் தான் வெற்றி பெறும்-ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

சென்னை
திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகம் தான் வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைளில் நேற்று கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் பேரவை மாவட்ட செயலாளர்களுக்கு செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை கழக ஓருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து பேசியதாவது:-
ஒவ்வொரு வருடமும், எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக செய்வது கழக புரட்சித்தலைவி பேரவை அம்மா காலத்திலிருந்து
நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த நிகழ்வை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சரியாக, சரியான நேரத்தில் செய்து வருகிறார்.
எதிர்க்கட்சியாக செயல்படுகின்ற நேரத்தில் கழகம் எவ்வாறு எல்லாம் எழுச்சியோடு, உணர்வோடு, உளப்பூர்வமாக ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்ற நிலையில் நமக்கு எல்லாம் நல்ல ஒரு பாடமாக, நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு நல்ல ஒரு பாடமாக அவர் செய்யும் பணிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
1972-ல் கழகத்தை உருவாக்கி ஒரு முறை இல்லை, இரு முறை இல்லை தொடர்ந்து மூன்று முறை வென்று தமிழகத்தினுடைய முதலமைச்சராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நல்ல ஒரு வழிகாட்டியாக நமக்கு திகழ்ந்தார். கட்சி உருவாக்கப்பட்ட ஐந்தே
ஆண்டுகளில் ஆளுகின்ற உரிமையை மக்களிடமிருந்து பெறும் கட்சியாக கழகம் நிலைபெற்றிருந்தது என்ற நிலையினை புரட்சித்தலைவர் நமக்கு உருவாக்கி தந்தார்.
புரட்சித்தலைவருடைய 10 ஆண்டு கால ஆட்சிக்கு பின்னால், புரட்சித்தலைவர் மறைவுக்கு பின்னால், புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டுக்காலம் இந்த இயக்கத்திலிருந்த வேதனைகள், சோதனைகளை எல்லாம் தாங்கி நின்றார்.
18 லட்சம் உறுப்பினர்களை கொண்ட இந்த இயக்கத்தை தனது கடுமையான உழைப்பின் மூலமாக, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட தூய இயக்கமாக, மாபெரும் இயக்கமாக அம்மா அவர்கள் உருவாக்கி தந்துள்ளார்.
நம்முடைய 50 ஆண்டு கால வீர வரலாற்றில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 10 ஆண்டு காலம், அம்மா அவர்கள் 16 ஆண்டு காலம், எடப்பாடியார் 4 ஆண்டுக்காலம் என 30 ஆண்டு காலம் கழகத்தின் வீர வரலாற்றில், ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆளுகின்ற தகுதியை, மக்களுடைய ஆதரவை பெற்ற ஒரே இயக்கம் நமது கழகம் தான். இந்த வரலாற்றை நமக்கு பெற்றுத்தந்தவர்கள் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் தான். அவர்கள் ஆற்றிய சேவைகள், தியாகங்கள், இந்த இயக்கத்தை அழித்து விட வேண்டும், ஒழித்து கட்டி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த தி.மு.க. மற்றும் அதன் கூட்டாளிகளின் சதிகளை முறியடித்து, மக்கள் இயக்கமாக நிலை நிறுத்தி, உறுதியாக நின்று இன்றைக்கு நம்முடைய கையில் இருபெரும் தலைவர்கள் தந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு நாம்எதிர்க்கட்சி. எதிர்க்கட்சி என்ற நிலையில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற நிலையில் நாம் உறுதியோடு, எண்ணங்களில் நிலை பெற்றுள்ளது.
புரட்சித்தலைவர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினாரோ, அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினாரோ அதனை மீண்டும் நிலை நிறுத்துவதற்குரிய கடமையும், பொறுப்பும் இன்றைக்கு நமக்கு இருக்கிறது.
அதிலும் குறிப்பாக இந்த இயக்கத்தை வழிநடத்தி கொண்டிருக்கின்ற தலைமை கழகத்தினுடைய நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் குறிப்பாக நமது பேரவை நிர்வாகிகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைக்கு நீங்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் செயல்திறன் மேம்பாடு அடைவதற்கான வழிவகைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பல்வேறு அறிஞர்கள், பேராசிரியர்கள், நாட்டு நடப்புகளை, அரசியல் தீர்வுகளை, அரசினுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து, பேச்சாற்றல் மிக்கவர்களை இங்கு அமரவைத்து, நல்ல பயிற்சிகளை, சாதனைகளை, திட்டங்களை பெறுவதற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இந்த முகாமில் உள்ள அனைத்து தலைப்புகளையும்
பார்க்கும்போது அதனை படித்ததோடு மட்டுமல்லாமல், அதனை நடைமுறைப்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை தொண்டர்கள் முதல் தலைமை கழக நிர்வாகிகள் வரை நிறைவேற்றுவதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செய்யவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
பொன்விழா காண்கின்ற மாபெரும் மக்கள் இயக்கம். கழகத்தின் வெற்றி வரலாறு. தாய் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்
வளர்ந்தது எப்படி? வளரும்போது இருந்த தடைகள், சோதனைகள். இவற்றை எல்லாம் நமது தலைவர்கள் எவ்வாறு உடைத்தெறிந்தார்கள்? தடைகளை உடைந்து எறிந்து மிகப்பெரிய மக்கள் இயக்கமாக, மக்களை காப்பாற்றுகின்ற
இயக்கமாக, இந்தியாவில் எத்தனையோ அரசியல் இயக்கம் இருக்கிறது. ஆனால் மக்களை பற்றி சிந்திக்கின்ற ஒரே இயக்கம் நமது கழகம்தான் என்று நமக்கு முன்னால் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தியவர்கள் நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.
தற்போது தி.மு.க. நடத்தும் திராவிட மாடல் ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை. இந்த உண்மை நிலையை நாம் ஓராண்டு காலமாக
அனுபவித்து கொண்டிருக்கிறோம். இதைத்தான் தேர்தலுக்கு முன்னர் சொன்னோம். தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதிகளை தருவார்கள். ஆனால் அவர்களால் நிறைவேற்ற முடியாது என்று எவ்வளவோ சொன்னோம். மக்கள் கேட்கவில்லை. இப்போது
மக்கள் அவதிப்படுகிறார்கள். எடப்பாடியார் பேசும்போது செவிடன் காதில் ஊதிய சங்கு என்று குறிப்பிட்டார். அது உண்மை தான்.
ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். பெரியவர் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருப்பார். அவரிடம் ஒருவர் ஒரு விஷயம் பேச போவார். இவர் எவ்வளவே பேசுவார். ஆனால் அவர் அமைதியாக இருப்பார். அவருக்கு காது கேட்காது.
பக்கத்திலிருந்த நாதஸ்வரத்தை வைத்து ஊதினால் அவர் கேட்பார் என்று ஊதுவார். அப்பொழுதும் அவர் அசையவில்லை. கடைசியில் ஊதியவருக்கு தான் வாயில் நுரை தள்ளியது. இப்படிதான் இப்போது நிலைமை உள்ளது. நாதஸ்வரத்தை ஊதுபவர்களாக இன்றைக்கு மக்கள் இருக்கிறார்கள்.
ஆனால் கேட்காத செவிடுகளாக இன்றைக்கு ஆளும் கட்சியினர் இருக்கிறார்கள். அந்தளவுக்கு மோசமான ஆட்சி நடக்கிறது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ், தி.மு.க. ஆண்டிருக்கிறது. கழகம் ஆட்சி புரிந்து சாதனை படைத்துள்ளது. நமது 30 ஆண்டு கால சரித்திரத்தில் யாருமே செய்ய முடியாத சாதனை செய்த ஒரே இயக்கம் கழகம் தான்.
மக்களை பற்றி சிந்தித்து மக்கள் நலத்திட்டங்களை, தொலைநோக்கு திட்டமாக, மக்கள் நலத்திட்டங்களாக தான் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் தந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தினுடைய ஜீவாதார உரிமைகளுக்கு பங்கம் ஏற்படுகின்றபோது அதில் வெற்றி பெற்று சட்டத்தின் மூலமாக நிலை நிறுத்திய கட்சியாக தான் கழகமும், கழக ஆட்சியும் இருந்தது.
குறிப்பாக காவேரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை இப்படி பல பிரச்சினைகளையும் சட்டத்தின் மூலமாக வெற்றி பெற்றோம். தி.மு.க. அதனை தருகின்ற நிலை இருந்தும், அவர்களால் செய்ய முடியாததை கழகம் தான் செய்தது என்ற வரலாறு நமக்கு இருக்கிறது.
இந்த வரலாற்றில் எல்லாம் நாம் நெஞ்சை நிமிர்த்தி மக்களிடம் எடுத்து செல்லுகின்ற பொழுது நியாயமான, தர்மமான வரலாற்றை, உண்மையான வரலாற்றை, தி.மு.க. போல பொய் சொல்லும் வரலாறு நம்மிடம் கிடையாது. மக்களே இப்போது இந்த ஆட்சி குறித்து சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
இனிமேல் இந்த தவறை செய்யமாட்டோம் என்று அவர்களே
தெரிவிக்கின்றனர். மாநில உளவுத்துறை மட்டுமல்ல, மத்திய உளவுத்துறையும் இன்றைக்கு தேர்தல் நடந்தால் தி.மு.க. 10 இடத்தில்கூட வெற்றி பெறாது என்ற நிலை தான் இருக்கிறது. எனவே இவற்றை எல்லாம் நமக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம்மை வளர்த்தவர்கள். 50 ஆண்டுகளுக்கு சொந்தக்காரர்கள், மக்களை நாம் நன்றாக நடத்துவோம் என்று நம்பிக்கையோடு மறைந்து வானத்திலிருந்து ஆசி வழங்கி கொண்டிருக்கின்ற புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோர் செய்த சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி, மீண்டும் கழகத்தை ஆட்சியில் அமர வைப்பது தான் நமது தலையாய கடமை.
இதற்கு நீங்கள் இன்று பிள்ளையார் சுழி போட்டுள்ளீர்கள். இந்த வேகம் தி.மு.க. அரசை கீழே இறக்கும் வரை இருக்க வேண்டும். உங்கள் முயற்சி வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
வெற்றிக்கு திறவுகோல் என்பதுதான் மிக முக்கியமான ஒன்று. அரசியல் கட்சி என்றால் வெற்றிபெற வேண்டும். இந்த வெற்றிக்கான
திறவுகோலை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்துள்ளோம். வளர்ந்த மாநிலமாக இருக்கின்ற மகாராஷ்டிரா கூட இவ்வளவு சாதனைகளை செய்ததில்லை.
அடித்தட்டு மக்கள் உயர வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் சமூக பாதுகாப்பு திட்டங்களை கொண்டு வந்தார்கள். இதனை தான் நாமும் செய்து கொண்டிருந்தோம். எந்த கட்சியும், ஆட்சியும் சொந்த மாநில நிதி ஆதாரத்தில் சமூக திட்டங்களை செயல்படுத்திய வரலாறு கிடையாது. இதற்கு தமிழ்நாடு தான் எடுத்துக்காட்டாக இருந்தது என்பதை எடுத்து சொல்ல வேண்டும்.
வருகின்ற தேர்தல் நமக்கான தேர்தல். நம்மை வளர்த்து, 50 ஆண்டுகள் இந்த இயக்கத்தை நிலை நிறுத்திய நம்முடைய
தலைவர்களுக்கு அர்ப்பணம் செய்யக்கூடிய தேர்தலாக எண்ணி செயல்படவேண்டும். இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகம் தான் வெல்லும் என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். இதற்கு அடித்தளம் அமைப்பதற்கு அம்மா பேரவை இருக்கிறது.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.