தி.மு.க அரசின் முகத்திரையை கிழித்தெறிவோம்

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி சூளுரை
சென்னை
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அரசின் முகத்திரையை கிழித்தெறிவோம் என்று தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி சூளுரைத்துள்ளார்.
மின்கட்டணத்தை உயர்த்தி மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத விடியா தி.மு.க அரசை கண்டித்து சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பட்டத்தில் தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், விருகம்பாக்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.என்.ரவி பேசியதாவது:-
ஏழை மக்களை வாட்டி வதைக்கும் வகையில் மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, கழிவுநீர் கட்டணம் வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என மக்கள் தலையில் பெரும் சுமையை சுமத்தி உள்ளது விடியா தி.மு.க. அரசு.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் விரைவில் முடிவு கட்டுவோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அரசின் முகத்திரையை கிழித்தெறிவோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கக்கூடிய ஒரே இயக்கம் கழகம்.
இவ்வாறு தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விருகை வி.என்.ரவி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலகண்ணன் தலைமையில் விடியா தி.மு.க அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.