தமிழகம்

மாநில திட்டக்குழுத் துணைத்தலைவராக சி.பொன்னையன் நியமனம்

சென்னை

மாநில திட்டக்குழுத் துணைத்தலைவராக  முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில திட்டக் குழு முதலமைச்சர் தலைமையில் இயங்கி வருகிறது. இந்த குழு ஆண்டு திட்டங்கள், ஐந்தாண்டு திட்டங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் மாநில திட்டக்குழுத் துணைத் தலைவராக  முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.