தற்போதைய செய்திகள்

பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி -கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

தேனி

பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் இமாம்அஜ்ரத். இவருக்கு இரண்டு சிறுநீரகத்திலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அஜ்ரத்தின் அறுவை சிகிச்சைக்கு உதவிட வேண்டும் என கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் முன்னாள் காவல் துணை கண்காணிப்பாளர் குலாம் வேண்டுகோள் விடுத்தார்.

அதனை தொடர்ந்து அஜ்ரத்தின் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி வழங்க தனது மகனுமான பசுமை உலகம் வி.ப.ஜெயபிரதீப்புக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

அதன் பேரில் நேற்று வி.ப.ஜெயபிரதீப் சார்பாக பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல் சமது, அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியை இமாம் அஜ்ரத்திடம் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.