தற்போதைய செய்திகள் மற்றவை

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல்-விழுப்புரம் மாவட்ட கழகம் நிவாரணம்

விழுப்புரம்,

திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறியதோடு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் நிவாரண உதவியை சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம் மனைவி புஷ்பா(வயது 60). இவரும், இவரது பேரக்குழந்தைகள் வினோதி (வயது 13), ஷாலினி (வயது 10), கிருஷ்ணன் (வயது 8) ஆகியோரும் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள செயல்படாத கல் குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.

பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ள சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், உயிரிாந்தவர்களுக்கு தனது இரங்கலையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து உள்ளார்.

மேலும் உயிரிந்தவர்களுக்கு நிவாரணமாக விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் ரூபாய் 25.000 உதவி தொகை அளித்து, திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனனை நேரில் சென்று அஞ்சலி செலுத்த அறிவுறுத்தினார்.

இதையடுத்து பெருமுக்கல் மற்றும் தென்களவாய் கிராமங்களுக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு மாவட்ட கழகம் சார்பில் ரூபாய் 25.000மும், சட்டமன்ற உறுப்பினர் சார்பில் ரூபாய் 15.000 உட்பட ரூபாய் 45000 வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின் போது மரக்காணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நடராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.