தற்போதைய செய்திகள்

வால்பாறை எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் – அ.இ.அ.தி.மு.க. தொழிற்சங்கம் அமோக வெற்றி

கோவை

வால்பாறையில் எஸ்டேட்டுகளுக்கான தொழிலாளர் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தொழிற்சங்கம் 5 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்று உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட்டுகளுக்கான தொழிலாளிகள் பிரதிநிதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கழகத்தை சேர்ந்த பாரளை மற்றும் லோயர் பாரளையை சேர்ந்த பிரான்சிஸ், தங்கம்மாள், ராமன், பழனியம்மாள், பன்னிமேடு எஸ்டேட் முப்புடாதி ஆகிய 5 பேர் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து வெற்றி பெற்றவர்கள் அண்ணா தொழிற்சங்க தேயிலைத் தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை அமீதுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இத்தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது