திருவள்ளூர்

1000 பேருக்கு நலத்திட்ட உதவி – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருவள்ளூர்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் செவ்வாப்பேட்டை ஊராட்சியில் புரட்சித்தலைவி அம்மா பேரவை இணை செயலாளர் செவ்வை எம் சம்பத்குமார் ஏற்பாட்டில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் பங்கேற்று 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரியை போராடி பெற்று தந்துள்ளார். இந்த 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு இந்த மாத இறுதியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

கழக ஆட்சியில் தான் செவ்வாய்பேட்டையில் ஆசிரியர் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டது. அதேபோல் செவ்வாய்பேட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வந்துள்ளோம். இப்படி அம்மா அரசு எண்ணற்ற திட்டங்கள் திருவள்ளூர் ஒன்றியத்திற்கு வழங்கியுள்ளது. மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்தால்தான் பல திட்டங்களை கொண்டு வர முடியும். திமுக ஆட்சியில் இதுவரை என்ன திட்டங்கள் கொண்டு வந்துள்ளனர். பூந்தமல்லி தொகுதியில் நீங்கள் திமுகவிற்கு வாக்களித்தீர்கள்.

அவர்கள் என்ன செய்தார்கள். காரிலேயே உலா வருகிறார்கள். இந்த ஆட்சியில்தான் சாலை வசதி, ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்குதல், வீடு இல்லாதவர்களுக்கு பசுமை வீடு திட்டம் என பல திட்டங்கள் செவ்வாப்பேட்டை ஒன்றியத்திற்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் செவ்வாப்பேட்டை மக்கள் திமுகவிற்கு வாக்கு அளித்து தவறு செய்துள்ளார்கள். இன்று வரை ஏதாவது ஒரு உதவி செய்து இருப்பார்களா? எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசினார்.