தற்போதைய செய்திகள்

5 முறை ஆட்சியில் இருந்தபோது பேரறிஞர் அண்ணாவுக்கு தி.மு.க. நூற்றாண்டு விழா நடத்தியதுண்டா? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

சென்னை, மார்ச் 12-
நீங்கள் 5 முறை ஆட்சியில் இருந்தபோது, பேரறிஞர் அண்ணாவுக்கு நூற்றாண்டு விழா நடத்தியதுண்டா? என்று திமுகவுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்சென்னை வடக்கு மாவட்டம்,திநகர் பகுதி கழகத்தின் சார்பில் சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் சத்தியா முன்னிலை வகித்தார்.பகுதி கழக செயலாளர் மு.உதயா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

72ம் ஆண்டு, பெற்ற தாய், தகப்பன் கூட,பிள்ளைகளுக்கு, இத்தனை பொருட்கள் வாங்கி கொடுப்பார்களா என தெரியவில்லை, அவரவர்கள் முடிந்த அளவிற்கு, உடல் தானம், ரத்த தான, மருத்துவ சிகிச்சை முகாம், கண் சிகிச்சை முகாம், நலத்திட்ட உதவிகள் என ஒவ்வொரு ஆண்டும் செய்கிறார்கள். இந்த 72-ம் ஆண்டில், அம்மாவின் புகழ், வானுள்ள வரை, வையகம் உள்ள வரை, அவரின் புகழ் நிலைத்திருக்கும்.

இந்த அற்புதமான திட்டத்தை, காவேரி காப்பாளன், விவசாய பட்டத்தை பெற்ற எளியமையான முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு சரித்திரத்தை படைத்துள்ளனர். என்ன சரித்திரம் படைத்துள்ளார்கள் என்றால், இந்த பிப்ரவரி 22ம் தேதி, அம்மாவின் பிறந்த நாள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிப்பார்கள் என்ற சரித்திரத்தை படைத்துள்ளனர் .

அறிவிப்பை கொடுத்து, ஐந்து முத்தான திட்டங்களை கொடுத்தார், ஆனால், எதிர்கட்சி தலைவருக்கு, அது பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உங்களுக்கென்ன ஞானோதயம் பிறந்திருக்கிறதா என கேட்கிறார், அம்மாவின் பிறந்த நாளில் தான், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க முடியும், இல்லை, உங்கள் தந்தையின் பிறந்த நாளிலா , அறிவிக்க முடியும், ஏற்றுக்கொள்வார்களா- அம்மாவின் பிறந்த நாளில், வரலாற்றில் அழியா புகழ் தந்த , முதல்வருக்கும், துணை முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள் என்றனர். ஸ்டாலினுக்கு, பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நமக்கு, இப்படி யாரும் ஆலோசனை கூறவில்லையே என நினைக்கிறார். அம்மா கனவு கண்டார். எங்களையெல்லாம் அழைத்து பேசி, மீண்டும், பாரத ரத்னா புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாளில், நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.

32 ஆண்டுகளில், தமிழகத்தில் தொடர்ந்து ஆளுகின்ற கட்சியாக, அதிமுக உருவாகி உள்ளது, அதை அம்மா நிறைவேற்றி காட்டினார். எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை, அம்மாவால் நடத்த முடியவில்லை என்றாலும், அவர் விட்ட பணி, தொட்ட பணியை சாமானிய தொண்டனாக இருந்து, முதல்வர், துணை முதல்வர் செய்து காட்டினார், 32 வருவாய் மாவட்டங்களில், நிறுவன தலைவர் நூற்றாண்டு விழா நடத்தினாலும், ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை வாரி வழங்கியுள்ளனர். மதுரையில் தொடங்கி, நூற்றாண்டு விழா, சென்னையில் நிறைவு பெற்றது.

நீங்கள் 5 முறை ஆட்சியில் இருந்தபோது, பேரறிஞர் அண்ணாவுக்கு நூற்றாண்டு விழா நடத்தியதுண்டா ? உழைப்பவர்கள் புரளி பேச மாட்டார்கள், யார் பேசுவதையும் , பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் , சட்டசபையில், திமுக உறுப்பினர்கள், தலைமீது ஏறி ஓடுகிறார்கள், புத்தகத்தை தூக்கி வீசுகிறார்கள். கடைசியில், காவலர்கள் வந்து, அவர்களை தூக்கி செல்கின்றனர். கடைசியில், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டையை கிழித்துக்கொண்டு, என்னால் இது தான் செய்ய முடியும் என்கிறார்.

இந்த 3 ஆண்டுகளில், தடையில்லா மின்சாரம் கொடுத்து, மின்மிகை மாநிலமாக மாற்றி காட்டியவர் முதல்வர். வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை இருப்பதாக சொல்கிறார்கள், நாங்கள் மறைக்கவில்லையே, நிதி நிலை அறிக்கையில் நாங்கள் தெளிவாக தாக்கல் செய்துள்ளோம். உங்கள் ஆட்சியில், கடன் சுமை இல்லாமல், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததூண்டா. நாங்கள், நிதிநிலையை கட்டுக்குள் வைத்துள்ளோம்.

அப்போது, பள்ளிக்கல்வி துறைக்கு, 14 ஆயிரம் கோடி, ஆனால், அதிமுக ஆட்சியில், முதல்வர், துணை முதல்வர் வழிக்காட்டுதலின் பேரில், ரூபாய் 34 ஆயிரம் கோடி என ரூபாய் 20 ஆயிரம் கோடி கூடுதலாக வந்துள்ளது. திமுக ஆட்சியில், முதியோர் ஓய்வூதிம் 500 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்காக, ரூபாய் 1200 கோடி ஒதுக்கப்பட்டன. வீட்டுக்கு செல்லும் போது, 16 லட்சம் பேருக்கு கொடுத்தீர்கள், ஆனால், சேலத்தில், முதல்வர், கூடுதலாக 5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க கூறினார். அம்மா இருந்த போது, 4200 கோடி நிதி ஒதுக்கினார்கள், ஆனால், அம்மாவின் பிள்ளை நான் என முதல்வர் 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.