தற்போதைய செய்திகள்

அரசின் பல்வேறு நடவடிக்கை காரணமாக வனப்பரப்பு 20.27 சதவீதம் மேம்பாடு – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதம்

சென்னை

அரசின் பல்வேறு நடவடிக்கை காரணமாக வனப்பரப்பு 20.27 சதவீதம் மேம்பட்டுள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதத்துடன் கூறினார்.

சட்டப்பேரவையில்  வனத்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அளித்த பதிலுரை வருமாறு:-

30க்கும் மேற்பட்ட துறைகள் தமிழக அரசின் கீழ் இயங்கினாலும் முதல் மானியக் கோரிக்கைக்கான வாய்ப்பு வனத்துறைக்கு வழங்கப்பட்டு இருப்பதற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதக் குலத்தின் தோற்றம் என்பது வனங்களில் தான் வனங்கள் செழித்தால் தான் வளமைக் கொழிக்கும் குருவிக்கு பழம் கொடுக்கும் கூடுகட்ட இடம் கொடுக்கும் வீடுகட்ட மரம் கொடுக்கும் நாம் சுவாசிக்கும் காற்றை வேடுகட்டி மாசு குறைக்கும் கரியமில வாயுவை கட்டுப்படுத்தி காற்றுதனை சுத்தப்படுத்தும் ஒலி மாசை குறைத்து உலகத்திற்கு அமைதி கொடுக்கும் இவை யாவிற்கும் மேலாகமழை வளத்தை பெருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தந்து சிறக்கும் அந்த வனங்கள் தான் காற்றின் ஈரத்தன்மையை பெருக்கி கார்மேக மழையை பொழியச் செய்யும் உயிர்களின் தாகத்தை தீர்க்கும் தன்னிகரில்லா உழவுத் தொழில் செழித்திட அடித்தளம் அமைக்கும் உயிர்களின் இரைப்பைக்கு உணவு தந்து ஜீவராசிகள் உயிர் வாழும் இடமாக பூமிக்கு பொழிவுதனை சேர்க்கும் ஆக மொத்தத்தில் வனங்களின் செழிப்பொன்று தான் மனித இனத்தின் செழிப்பாகும்.

ஒரு நாட்டின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு வனங்களாக இருக்க வேண்டும் என்கிற ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலைப் பின்பற்றி தமிழக வனத்துறை தமிழகத்தின் காடு வளர்ப்பு மற்றும் தோட்டக் கலை போன்றவற்றிற்கு அளப்பரிய முன்னுரிமையை அளித்து வருகிறது. தீவிர காடு வளர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக வனப்பரப்பு 2017-ம் ஆண்டில் 26,281 ச.கி.மீ.லிருந்து 2019-ம் ஆண்டில் 26,364 ச.கி.மீ ஆக அதிகரித்துள்ளது. மேலும் மரப் பரப்பளவு 2017-ம் ஆண்டில் 4,671 ச.கி.மீ- லிருந்து 2019-ம் ஆண்டில்4,830 ச.கி.மீ ஆக அதிகரித்துள்ளது.

தங்கத்தை தரம் பார்த்து சொல்வதற்கு நீ உரைகல்லாக இருக்க வேண்டும் என்பார்கள். அதுபோல மரம் நட்டால்வளம் பெருகும் என்று மக்களுக்கு சொல்வதோடு நின்றுவிடக் கூடாது என்பதற்காகத் தான் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளில் ஆண்டுதோறும் லட்சோப லட்ச மரக் கன்றுகள் நட்டுமூவர்ணக் கொடிபிடிக்கும் இயக்கம் முன்மாதிரி இயக்கமாக திகழ்கிறது. நாம் நட்டு வரும் மரக்கன்றுகளின் எண்ணிக்கையோ பல கோடிகளைத் தாண்டி உலக சாதனை படைத்திருக்கிறது. மேலும் தமிழ்நாடு வனத்துறைவனத்தின் பரப்பை விரிவாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டதன் பயனாக        20.27 விழுக்காடு அளவிற்கு வனப்பரப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

இது 2017-ம் ஆண்டின் இந்திய வன நிலை அறிக்கையுடன் ஒப்பிடுகையில் 2019-ல் 83.02 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. தேக்குமரத் தோட்டங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் 1200 ஹெக்டேர் பரப்பளவில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2020-21-ம் ஆண்டிலும் ரூ.7.97 கோடி மதிப்பீட்டில் தொடரப்படும். காப்புக் காடுகளில் சந்தனமரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ்2019-20ஆம் ஆண்டில் ரூ.14.37 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2020-21-ம் ஆண்டிலும் ரூ.7.55 கோடி மதிப்பீடில் செயல்படுத்தப்பட உள்ளது. வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்குப் புத்துயிர் அளிக்கும் திட்டத்தின்கீழ் 2019-20-ம் ஆண்டில் ரூ.9.03 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாநிலத்தில் பல்லுயிர் மற்றும் உயிர்ப் பன்மையை பாதுகாக்க வேண்டி தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடப்பு 2020-21 ம் ஆண்டில் ரூ.920.56 கோடி நிதியில் தொடங்கப்பட உள்ளது.

வனவளங்கள் மனித இனத்தை வாழவைக்கும், என்றாலும் அந்த வனங்களையே மனித குலத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் வனத்துறையைச் சார்ந்துள்ளது. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இடர்பாடுகள் விஷமிகளால் மேற்கொள்ளப்படும் இடையூறுகள் இவை அனைத்திலிருந்தும் மேற்குமற்றும் கிழக்கு மலைத்தொடர்ச்சி மலைகள் உட்படவனங்களை காத்திட நம் அரசு ஏராளமான நடவடிக்கைகளையும் காவல் மற்றும் தடுப்பு முயற்சிகளையும் கையாண்டு வருகிறது. மேலும் அம்மாவின் அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளின் பயனாய் காடுகள் வளம் காட்டி என அழைக்கப்படும் புலிகளின் எண்ணிக்கை 2014ல் 229லிருந்து 2018-ம் ஆண்டில் 264-ஆக அதிகரித்துள்ளது.

நீர்நிலைகளை தூர்வாரி விவசாயிகளுக்கு விடியலை கொடுத்தது போல் வனவாழ் மக்களின் வாழ்வாதாரம் காக்க2019-20 ஆம் ஆண்டு முதல் நீர்நிலைப்பாதுகாப்பு மற்றும் நீர்ப்பிடிப்பு முகடுகளில் நீர்வள மேம்பாட்டினைஉறுதி செய்யும் நோக்கத்தில், பாலாறு புத்துயிர் திட்டம்ரூ.13.02 கோடியில் 2019-2020 ஆண்டில் ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் ஆண்டில் இத்திட்டமானது ரூ.6.76 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், வனச் சொத்துக்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு576.972 கி.மீ. நீளத்திற்கு, 107 வனச்சாலைகளை மேம்படுத்திட ரூபாய் 57.53 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வன எல்லைகளை துல்லியமாக நிர்ணயம் செய்யும் பொருட்டு புவியிடங்காட்டி மூலம் வரையறை செய்வதற்கான திட்டம் ரூ.50 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எங்கள் நெஞ்சமெல்லாம் நிலைத்திருக்கும் நிரந்தரமந்திரச் சொல்”அம்மா” அவர்களின் காலடித் தடத்தில் கடுகளவும்தப்பாது கடமை ஆற்றும் எடப்பாடியாரின் அரசு வனத் துறை சுணக்கமின்றி செயல்பட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 14 உதவி வனப்பாதுகாவலர்கள் மற்றும் 154 வனப் பயிற்றுநர்கள் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 300 வனவர்கள், 726 வனக்காப்பாளர்கள் 61 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள், 564 வனக்காவலர்கள் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 196 மிகைப்பணியிட தோட்டக்காவலர்கள் / வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மாலி பதவிக்கான ஊதிய விகிதத்தில் மிகைப்பணியிட வனக்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 164 உதவியாளர்கள், 48 இளநிலை உதவியாளர்கள், 22 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் மற்றும் 38 தட்டச்சர்கள் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வனத்துறையின் மூலம்தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும்தகுதியின் அடிப்படையில் மட்டுமே யாருடைய தலையீடும் இல்லாமல் இணையவழி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

கருணை அடிப்படையில் 35 இளநிலை உதவியாளர்கள், 3 தட்டச்சர்கள், 6 வனக்காப்பாளர்கள், 12 இரவுக்காவலர்கள், ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு மின்வினைஞர் ஆகியோர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அன்னமிட்டே வாழ்ந்திட்ட அரசாட்சி தத்துவத்தை ஆட்சியில் பின்பற்றும் அம்மாவின் அரசுவேட்டைத் தடுப்பு காவலர்களின் தொகுப்பூதியம் மாதம் 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளார்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், களப் பணியாளர்களின் குடியிருப்புகளுக்கு சிறப்பு பராமரிப்பு பணிகள் ரூ.30 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடதேக்கு விற்பான் என்பது போலவெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் தூண்டுகோலாக இருப்பதுவிருதுகளும், பதக்கங்களும் தான். அப்படி பதக்கங்களையும் விருதுகளையும் ஏராளமாய் வென்று பாரத தேசத்திற்கு வழிகாட்டும் முன்னோடி மாநிலம் என்றமுடி சூடிய பெருமையை எடப்பாடியாரின் அரசும் தாய் வழித்தடத்தில் தழைத்தோங்கி நிற்கிறது. அவ்வழியில் தமிழக அரசின் வனத்துறையும், பாரதப் பிரதமரால் புலிகள் பாதுகாப்பில் தேசிய அளவில்”சிறந்த மேலாண்மைக்கான” விருது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் நலன்

ஒரு நாட்டின் பண்பாட்டையும் மரபினையும் இந்த உலகிற்கு எடுத்துச் சொல்வது நதிக்கரை சமூகங்களும் மலைவாழ் சமூகங்களும் தான். இதில்வனங்களை நம்பியே பெரும்பான்மையாக வாழும் பழங்குடி மக்களின் நலனுக்காக தமிழக அரசின் வனத்துறை ஏராளமான தொண்டுகளை செய்து வருகிறது. தமிழ்நாடு வனத்துறை, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் கோட்டங்களில் ஜவ்வாது மலையிலும், கோயம்பத்தூரில் ஆனைமலையிலும் பழங்குடியினருக்கான 20 பள்ளிகளை நடத்தி வருகின்றது. 2019-20 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி, வேலூர், நாமக்கல் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 4 பழங்குடியின கிராமங்களில் ரூ.22.00 லட்சம் செலவில் குடிநீர் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2019-20ஆம் ஆண்டில் பழங்குடியினர் பகுதிகளில் 333 வீடுகள் கட்டுதல், 3 சாலைகளை மேம்படுத்துதல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 16 கோடி ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்பு

வனங்களும் அதன் வளங்களும்பூமித்தாய் மனித குலத்திற்கு வாரிக்கொடுத்த பொக்கிஷங்கள் அப்படி பொக்கிஷங்கள் எனும் போது அதனை போற்றி காத்திடவும் வேண்டும் இருக்கும் பொக்கிஷங்களை இரட்டிப்பாக பெருக்கிடவும் வேண்டும். இதனை பசுமையையே குறியீடாக கொண்டகழக அரசு மழலையை மடியிட்டு வளர்க்கிற ஒரு கனிவுமிக்க தாயின் கடமையாக செவ்வனே செய்து சிறந்தோங்கி நிற்கிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மேலாண்மை மற்றும் வனஉயிரின பாதுகாப்பில் தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது.மாநிலத்தின் வனப்பரப்பில் 30.92 விழுக்காடு (7073 சதுர கிலோமீட்டர்)பாதுகாக்கப்பட்ட பகுதி மேலாண்மையின் கீழ் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 5 தேசிய பூங்காக்கள் 15 வனஉயிரின சரணாலயங்கள் 15 பறவை சரணாலயங்கள் 3 உயிர்க்கோள் காப்பகங்கள் 2 பாதுகாக்கப்பட்ட ஒதுக்குப் பகுதிகள் 4 புலிகள் காப்பகங்கள்4 யானைகள் காப்பகங்கள் மற்றும் ஒரு மரபியல் பூங்கா அமைந்துள்ளன. இராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான கடலோரப் பகுதிகளில் 21 பவளப் பாறைகள் கொண்டவளம் வாய்ந்த தீவுகளை உள்ளடக்கி மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பகத்தை1989 ஆம் ஆண்டில் மத்திய அரசால் இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமாக அறிவிக்கை செய்யப்பட்டது. 2019-20ஆம் ஆண்டில் இத்திட்டம் ரூ.4.87 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2020-21-ம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியானது உலகின் 30 முக்கியமான உயிர்ப்பன்மைத் தலங்கள் மற்றும் இந்தியாவில் 3 மாபெரும் தனிச்சிறப்பைக் கொண்ட மையங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள் வனஉயிரின சரணாலயங்கள் பறவைகள் சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்டப் பகுதிகளில் 2019-2020 ஆம் ஆண்டில் ரூ.8.76 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள்செயல்படுத்தப்பட்டு வருகின்றன.2020-2021ஆம் ஆண்டிலும்இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில்புலிகளையும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் மற்றும் மனித துன்புறுத்தல்களை குறைக்கும் வகையிலும், 2019-2020 ஆம் ஆண்டில்ரூ.41.56 கோடி மதிப்பீட்டில் புலிகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-2021ஆம் ஆண்டிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். யானைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் வாழ்விட மேம்பாட்டிற்காக 2019-2020ஆம் ஆண்டில் ரூ.6.01 கோடி மதிப்பீட்டில்யானைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2020-21ஆம் ஆண்டில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.2019-2020ஆம் ஆண்டில் திருக்கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 28 யானைகளுக்கு 15.12.2019 முதல் 31.01.2020 வரையிலான 48 நாட்களுக்கு ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்றது. மேலும், வனத்துறைக்குச் சொந்தமான 62 யானைகளுக்கான புத்துணர்வு முகாம் 06.02.2020 முதல் 24.03.2020 வரையிலான 48 நாட்களுக்கு ரூ.70 லட்சம் செலவில்நடைபெற்று வருகிறது.

மேலும், 2020-2021-ம் ஆண்டில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இம்முகாம் நடத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் தண்டரை மற்றும் புல்லேரியில் அமைந்துள்ள மருத்துவ தாவர தோட்டங்களை ரூ 3.34 கோடியில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் சிறுமலையில் ரூ.5 கோடி செலவில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. 2019-20 முதல் 2021-22 முடிய 3 ஆண்டுகளில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காப்புக்காடுளில் ஆக்கிரமிப்பினை தவிர்க்கும் / தடுக்கும் பொருட்டும் கான்கிரீட் சுவர் மற்றும் உயிர் வேலி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு 2019-20-ம் ஆண்டில் 14.2 கி.மீ நீளத்திற்கு கான்கீரிட் சுவர் மற்றும் 75 கி.மீ நீளத்திற்கு உயிர் வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுவனத்துறையில் உள்ள மரக்கிடங்குகள்,சோதனைச் சாவடிகள், அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் ரூ 1.03 கோடி செலவில் பொருத்தப்பட்டு வனப்பாதுகாப்பினை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.